Tamilnadu
பாலிடெக்னிக் தேர்வு: அதிமுக ஆட்சியில் மூலைமுடுக்கெல்லாம் முறைகேடு; மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை!
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அப்போது இந்த தேர்வில் பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அப்போதைய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பலர் பணம் கொடுத்து முறைகேடாக வெற்றி பெற்றது தெரியவந்தது.
அதனால் அனைவரின் மதிப்பெண் சான்றிதழ் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெறும் 25, 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட 150க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் பணம் கொடுத்து அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தது நிரூபனமானது. அதனால் முதற்கட்டமாக 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இனி அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்தத் தேர்விலும் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது.
அந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது மேலும் 66 பேர் முறைகேடாக பணம் கொடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அறுபத்தி ஆறு பேரின் பெயர், முழு முகவரி மற்றும் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறுபத்தி ஆறு பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வில் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட விரிவுரையாளர் பணிக்கான தேர்வு மீண்டும் இந்த மாத இறுதியில் நடைப்பெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!