Tamilnadu
சட்டவிரோதமாக மணல் அள்ளிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ : வழிமறித்து அதிரடி காட்டிய வாடிப்பட்டி போலிஸார்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிவந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு சொந்தமான லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாடிப்பட்டி அருகே சடையம்பட்டி பிரிவு எனுமிடத்தில் வருவாய்த்துறையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் சுமார் ஆறு யூனிட் கிராவல் மண் இருந்தது.
இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது உரிய அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளி வந்ததும், அந்த லாரி சோழவந்தான் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு சொந்தமான லாரி என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் அதனை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வருவாய் துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வாடிப்பட்டி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதற்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் : ஒன்றிய அரசின் பதில் மூலம் வெளிவந்த உண்மை!
-
மன்னிப்பு கேள் : எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
-
வேளாண்மை – உழவர் நலத் துறை : 169 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?” - அமைச்சர் மா.சு. கண்டனம்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?