Tamilnadu

“அண்ணா நினைவு இல்லத்தை புறக்கணித்து சென்ற எடப்பாடி பழனிச்சாமி” : அண்ணாவுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?

அண்ணா உருவம் வைத்தும் அண்ணா பெயரை வைத்து கட்சி நடத்தும் அ.தி.மு.க கட்சி அண்ணாவின் கொள்கை காற்றிப் பறக்கவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், எதிர்கட்சி தலைவராக முதல் முறையாக பொருப்பேற்று காஞ்சிபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்தை புறக்கணித்து சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்லாமல், கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்துவிட்டு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வந்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணா நினைவு இல்லத்லை புறக்கணித்து சென்றதாக அ.தி.மு.கவினரே குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Also Read: “பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் போது தீ விபத்து” : முதியவரின் விபரீத முடிவால் நடந்தது என்ன?