Tamilnadu
“பசிக்குது சோறு போடு” : சாப்பாடு இல்லை என்று கூறிய தாயைக் கொன்ற கொடூர மகன் - குடிபோதையில் நடந்த விபரீதம்!
சென்னை வேளச்சேரி திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் மூர்த்து அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயிடம் உணவு கேட்டுள்ளார்.
தினமும் குடிபோதையில் வருவதால் தாய் லட்சுமி, மூர்த்தியைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை சரமாறியாக மூர்த்து குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தகவலறிந்து வந்த போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!