Tamilnadu
“வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ கட்டாய காப்பீடு உத்தரவு வாபஸ்” : உயர்நீதிமன்ற அறிவிப்பு சொல்வது என்ன?
செப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையான தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களை குற்றம்சாட்டியிருந்தார்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் , ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பொது காப்பீட்டு கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டத்தை,காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்றும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தற்போதைய சூழலில் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்து அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை , அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்து உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!