Tamilnadu
மனைவி சுட்ட தோசை கருகியிருந்ததால் கணவர் தற்கொலை... 4 முறை தற்கொலைக்கு முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்!
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மாதவி. பழனி குடிபோதைக்கு அடிமையானதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பழனி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாதவி அவர் சாப்பிடுவதற்குத் தோசை சுட்டுக்கொடுத்துள்ளார். அதில் ஒரு தோசை கருகியிருந்துள்ளது.
இதனால் மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமாகத் தனது அறைக்குச் சென்று பழனி கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியபோது பழனி ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது முறையாக தற்கொலைக்கு முயன்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !