Tamilnadu
“ஆரணியைத் தொடர்ந்து திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டவர் திடீர் பலி” : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூர் சென்றுள்ளார். பின்னர், வேலை முடித்து விட்டு திருவண்ணாமலை செல்வதற்காக திருக்கோவிலூர் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அப்போது, கையில் வாங்கி வந்திருந்த பரோட்டாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த பயணிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் தாமோதரனைச் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் பரோட்டா சாப்பிடும் போது மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகத் தரமற்ற உணவு உண்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தற்போது பரோட்டா சாப்பிட்ட மற்றொருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உணவகங்களில் தரமில்லாத உணவுகள் சமைக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
கோப்பையை வென்றும் தொடரும் சோகம்... அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த RCB அணி... விவரம் உள்ளே !
-
"குற்ற உணர்ச்சியே இல்லாமல் பொறுப்பற்று பேசுகிறார் விஜய்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் !
-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அனுபவிக்கும் கொடுமைகள் - பாஜக அரசின் அவலத்தை அம்பலப்படுத்திய முரசொலி !
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!