Tamilnadu
தேதி அச்சிடாமல் குளிர்பானம் தயாரிப்பு.. 3,000 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் - சோதனையில் பகீர் சம்பவம்!
திருச்சி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியை அச்சிடாமல் குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த குளிர் பானங்களை சோதனை செய்தபோது அதில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை அச்சிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை அச்சிடப்படாமல் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் லிட்டர் குளிர் பானங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குளிர் பானத்தின் மாதிரியை சென்னை கிண்டியில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சோதனை முடிந்தபிறகு முழுமையான தகவல் தெரியவரும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேதி குறிப்பிடாமல் குளிர்பானம் தயாரிக்ககூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!