Tamilnadu
குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு சுற்றிய நாய்.. நரபலி கொடுத்து கொலையா? : மதுரை போலிஸ் தீவிர விசாரணை!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் தலையை நாய் கவ்வியபடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார், நாயிடமிருந்து குழந்தையின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாய் கவ்வி வந்த குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதேபோல், சாக்கடை கழிவு நீரின் அழுக்குப் படிந்திருந்தது. இதனால் யாராவது குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்து சாக்கடையில் வீசி இருப்பார்களோ என்ற சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பது குறித்து அப்பகுதி முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மதுரை முழுவதும் அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!