Tamilnadu

“விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கவில்லை” : உத்தரவை திரித்துப் பேசிய பா.ஜ.க MLA-வுக்கு முதல்வர் பதிலடி!

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருந்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். பல இடங்களில் விநாயகர் சிலைகளை போலிஸார் அகற்றும் வீடியோவை பார்ப்பது வருத்தமாக உள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை இன்றே முதலமைச்சர் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி கொண்டாடக் கூடாது என அரசு சொல்லவில்லை எனவும் ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படிதான் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரானா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை எனவும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: சட்டப்பேரவையில் அதகளம் செய்த முதலமைச்சர்... தமிழ் பண்பாட்டு ஆய்வு அறிவிப்புக்கு குவியும் பாராட்டு!