Tamilnadu

“விநாயகர் சதுர்த்தி தடைக்கு பிரதமர் மோடியிடம் போய் கேளுங்கள்”: பா.ஜ.கவினருக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி!

விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஆந்திராவில் பா.ஜ.கவினர் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட முயற்சிப்பதாக அறநிலையங்கள் துறை அமைச்சர் வெல்லம்பள்ளி சீனிவாஸூம் பா.ஜ.கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆந்திர அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சாத்தியமான மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு பொது கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெகுஜனக் கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக, ஒய்.எஸ்.ஆர் சாதனை விருதுகள் மற்றும் ஆசிரியர் தின விழா போன்ற நிகழ்வுகளை மாநில அரசு ஒத்திவைத்தது.

75-ஆவது சுதந்திர தின விழாக்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்துப் பண்டிகைக்கு, ஆந்திர அரசு தடைவிதிக்கவில்லை. கொரோனா பரவல் ஏற்படக் கூடாது என்பதற்காக பண்டிகை காலங்களில் உள்ளூர் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது.

அவர்களின் அறிக்கையை பா.ஜ.க தயவு செய்து படிக்க வேண்டும். அதில், தேசிய அளவிலான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தொடர்ந்து பின்பற்றும்படி ஒன்றிய அரசு கூறியுள்ளது. அதை பின்பற்றியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு விதித்து இருக்கிறோம்” என்று ஜெகன் அரசு கூறியுள்ளது.

Also Read: “திராவிடம் என்றால் என்ன தெரியுமா?” : ஆரியச் சக்திகளுக்கும், கைக்கூலிகளும் ‘முரசொலி’ தலையங்கம் பதிலடி!