Tamilnadu
வ.உ.சி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை இராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பிலான கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களது வாழ்க்கைக் குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மடிப்பேடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வெளியிட, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், உ.வ.சிதம்பரனாரின் வாழ்க்கைக் குறிப்பு மடிப்பேடுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுதந்திரன தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி அவர்களின் 150வது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று வ.உ.சியின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வ.உ.சியின் பறிந்த தினத்தையொட்டி இவரின் புகைழை பறைசாற்றும் வகையில் 14 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!