Tamilnadu
“காடுகளின் தூய்மை காவலனாக திகழும் பிணந்தின்னி ‘பாறு கழுகுகள்’ - என்ன காரணம்?” : சிறப்பு செய்தி தொகுப்பு!
இன்று உலக பாறு கழுகுகள் தினம் என்பதால், காடுகளின் தூய்மை காவலனாக செயல்படும் பாறு கழுகுகளின் குறித்த சிறப்பு செய்தி பின்வருமாறு :-
வனப்பகுதியின் தூய்மை பணியாளராக வானத்தில் வலம் வரும் Vulture எனப்படும் பாரு கழுகுகளின் பணி மிகவும் சிறப்பானவை. பொதுவாக பாறு கழுகுகள் வேட்டை பறவை கிடையாது, புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகள் வாழும் பகுதியில் மட்டுமே இந்த பாறு கழுகுகள் வாழும் தன்மை கொண்டது.
வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு அல்லது இயற்கையாக உயிரிழக்கும் வனவிலங்குகள் சாப்பிட்டு வனப்பகுதியை தூய்மைப்படுத்துவதில் பாறு கழுகுகள் மிகப்பெரி பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் வனப்பகுதியின் தூய்மை காவலர் என பாரு கழுகுகளை அழைப்பதுண்டு.
கானுயிர் பார்வையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் Vulture இனத்தை சேர்ந்த இந்த பாறு கழுகுகள் நான்கு வகைகள் உள்ளன. உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கோடிக்கு மேல் இந்த பாறு கழுகு இனம் வாழ்ந்த நிலையில், இந்தப் பறவையினம் பல்வேறு காரணங்களால் வெகுவாக அழிந்தன.
இந்தியாவில் கால்நடைகளுக்கு போடப்படும் வலி நிவாரணியான DICLOFENAC எனப்படும் தடுப்பூசி போடப்பட்டு சில காலங்களில் உயிரிழக்கும் கால்நடைகளை சாப்பிட்ட Vulture எனப்படும் பாறு கழுகுகள், 90 சதவீதம் அழிந்துவிட்டது, மிக வேதனையான விஷயம் என்றாலும் தற்போது கால்நடைகளுக்கு செலுத்தக்கூடிய இந்த வலி நிவாரணியான DICLOFENAC எனப்படும் தடுப்பூசி கால்நடைகளுக்கு செலுத்த 2008ம் ஆண்டு அரசு தடை விதித்து இருப்பதால், தற்போது இவ்வகை கழுகு இனங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக 10% பாறு கழுகுகள் தென்மாநிலங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் பள்ளத்தாக்கில் உள்ள நீரோடைகள் அமைந்துள்ள பகுதியில், கூடு கட்டி குஞ்சு பொரித்து வாழ்வது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமய மலை மற்றும் நீலகிரி மாவட்டம் மகளிர் பள்ளத்தாக்கில் உள்ள வனப்பகுதியில் மட்டுமே உலக அளவில் பாறு கழுகுகள் வாழ்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை தூய்மையாகவும், விலங்குகளை நோய் இடமிருந்து பாதுகாப்பதில் வனப்பகுதியில் மிகப் பங்கு வகிக்கும் Vulture வகை அணைகள் தமிழ்நாட்டில் அதுவும் நீலகிரியில் மட்டும் அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !