Tamilnadu
படிக்காம forward செய்தது ஏன்? மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? - S.ve.சேகருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தனக்கெதிரான ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், "அந்த பதிவை படிக்காமல் forward செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்" தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!