Tamilnadu
“நீ யார், ஆதார் அட்டையைக் காட்டு” : ம.பி-யில் முஸ்லிம் தொழிலாளி மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்!
உத்தரப் பிரதேசம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்லீம் அலி (25) என்ற வளையல் வியாபாரி, தன்னை இந்து என்று கூறி, வாடிக்கையாளர்களிடம் வியாபாரம் செய்தார்; 3 விதமான அடையாள அட்டைகளை அவர் வைத்திருந்தார் என்று கூறி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மேலும் பாதிக்கப்பட்ட தஸ்லீம் மீதே போக்சோ உட்பட 14 பிரிவுகளில் வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அதிர்ச்சி மறைவதற்கு முன்பாக, அதே மத்தியப் பிரதேச மாநிலத்தில், மற்றுமொரு முஸ்லிம் வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
45 வயதான ஜாகித்கான் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். கிராமம் கிராமமாக இருசக்கர வாகனத்தில் சென்று பிஸ்கட் விற்பனை செய்துவரக் கூடியவர். ம.பி. மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அம்லாதாஸ் கிராமத்தைச் சேர்ந்த இவர், அருகிலுள்ள போர்லி கிராமத்துக்கு வழக்கம் போல் பிஸ்கட் விற்கச் சென்றுவிட்டு, திரும்பி வந்துள்ளார்.
அப்போது இரண்டு பேர், அவரிடம் வந்து, “நீ யார், அடையாள அட்டையைக் காட்டு, ஆதாரை எடு!” என்று மிரட்டியுள்ளனர். ஜாகித்திடம் ஆதார் அட்டை அப்போது இல்லை. இதனையடுத்து அந்த இருவரும் ஜாகித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், ஜாகித்தின் கை, மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!