Tamilnadu
சினிமாவையை மிஞ்சும் கொலை... 4 ஆண்டு காத்திருந்து பழி தீர்ப்பு: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவானி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே ஹரி மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தியால் ஹரியை சரமாரியாக வெட்டினர். வெட்டுக் காயத்துடன் வீட்டிற்குள் சென்ற ஹரி அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு கும்பலை நோக்கி வெட்டி வந்துள்ளார்.
ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை அடுத்தடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதைப் பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியில் என்னசெய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, அம்பத்தூரில் பதுங்கியிருந்து கும்பலை போலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ், பிரவீன், அஜித். சங்கர், வாசு, சஞ்சய், கணேஷ் குமார், தமிழ் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. ஹரி மற்றும் இவரது கூட்டாளிகள் 2017ம் ஆண்டு பிரபல ரவு பப்லுவை ஆந்திராவில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலைக்குப் பழி வாங்கவே பப்லுவின் கூட்டாளிகள் காத்திருந்து, சரியான நேரம் கிடைத்த போது ஹரியை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து எட்டு பேரையும் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வியாசர்பாடியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !