Tamilnadu

“கை, காலை வெட்டிருவேன்”.. தடுப்பூசி முகாமில் தகராறு செய்த அ.தி.மு.க நிர்வாகி - கைது செய்த போலிஸ்!

ஈரோடு மாவட்டம், வெள்ளைக்கோவில் பாளையத்தில் கடந்த 14ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது அங்குத் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் அங்கு வந்துள்ளார்.

அப்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு, கொரோனா தடுப்பு விதிகளை மீறி தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளார். அப்போது இளங்கோ என்பவர் ஏன் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.கவினர் இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், ”யாருனு நினைச்சிக்கிட்டு இருங்கிங்க. வந்தேன்னா கையை, காலை வெட்டிருவேன்” என கொலை மிரட்டல் விடுத்து ஒருமையில் பேசியுள்ளார்.

இதையடுத்து இளங்கோ, அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் மீது நம்மியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் இன்று சுப்பிரமணியனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், சிறையில் இருக்கும் சுப்பிரமணியனைச் சந்திக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். ஆனால், ஒரு நில நிமிடத்திலேயே அவரை சந்தித்து விட்டு சிறையிலிருந்து கிளம்பிவிட்டார்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் நிலக்கரி முறைகேடு: தங்கமணி அறிக்கை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!