Tamilnadu
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. +2 மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது : ‘பகீர்’ தகவல்!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளியில் வேலை இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், மாணவி அதிக நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெற்றோர்கள் கொடுத்த ஒரு தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணை செய்தபோது மாணவி சேலத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேலம் சென்ற போலிஸார் மாணவியை மீட்டனர். அப்போது, மாணவியுடன் இருந்த வாலிபரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பதிக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இது குறித்து மாணவி திருப்பதியிடம் கூறியுள்ளார். இதனால் திருப்பதி என்னுடன் நீ வந்துவிடு, உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என கூறி அவரை சேலம் அழைத்துச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!