Tamilnadu
பெண் போலிஸைக் கொலை செய்த கணவர்.. விருதுநகரில் நடந்த பயங்கரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விக்னேஷ். அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை பணிமனையில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பானுப்ரியா (30). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (20-8-21) இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்து பானுப்பிரியாவின் கழுத்தை பெல்ட்டால் நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது. அதில் பானுப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விருதுநகர் சூலக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து பானுப்ரியாவின் கணவர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!