Tamilnadu
“பெண்களிடம் சிரித்து பேசிய கணவன்; மனைவி தட்டி கேட்டதால் நடந்த விபரீதம்” : சென்னையில் பயங்கரம்!
சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், பேக்கரி நடத்தி வரும் முத்து, கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளரிடம் சிரித்து சிரித்துப் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று கடையில் வேலைகளை முடித்து விட்டு முத்து இரவு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து மனைவி விஜயலட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவர் மயங்கியுள்ளார்.
பின்னர், அடுத்தநாள் காலையிலும் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போதும் முத்து மனைவியைத் தாக்கியுள்ளார். இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு உறவினர்கள் விஜயலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உறவினர்கள் முத்து மீது போலிஸில் புகார் செய்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!