அதிமுக மாவட்ட துணைசெயலாளருடன் படப்பை குணா
Tamilnadu

அ.தி.மு.க ஆதரவால் தாதாவாக வலம் வந்த பிரபல ரவுடி குணா கைது; காஞ்சிபுரம் போலிஸார் அதிரடி!

அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக திருப்பெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகளில் சென்று மிரட்டி தன் வசப்படுத்திக் கொண்டு இருந்த வரும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தாதாவாக வலம் வரும் பிரபல ரவுடி குணா என்கிற குணசேகரன் அதிமுக ஆதரவாளர் மதுரமங்கலம் கூட்டுறவு சங்க தலைவருமாவார்.

பல்வேறு குற்றச்செயல்களில் படப்பை குணா ஈடுபட்டாலும் இவர் மீது புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்பட்டு வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவரின் தந்தை படப்பை குணாவிடம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 2,00,000/- ரூபாய்க்கு வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்ததாகவும் வெங்கடேசன் , அப்பு , மணிகண்டன், சதீஷ் ஆகியோர் ரூபாவதி வீட்டிற்கு சென்று அவரிடம் ஆபாசமாக பேசி குணா பத்திரத்தை வாங்கி வரச் சொன்னார் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

திருப்பெரும்புதூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனி உடன் பிரபல ரவுடி குணா

இச்சம்பவம் தொடர்பாக ரூபாவதி இன்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் சென்று புகார் அளித்ததன் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில் திருப்பெரும்புதூர் டிஎஸ்பி மணிகண்டன் மேற்பார்வையில் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவுடி குணாவை கைது செய்து, நீதிமன்ற காவலில் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சாதி மறுப்பு திருமணம் செய்த குகன் ஞானப் பிரியா தம்பதியினரையும் அவரது குடும்பத்தினரையும் படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டியதால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் குறித்து ஞானப் பிரியா சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்தும் அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த தம்பதியினர் உயிருக்கு பயந்து தலைமறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: S.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid