Tamilnadu
கூடுதலாக வரதட்சணை... மறுத்த மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவன் : மதுரையில் கொடூரம்!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண்குமார். இவருக்கும் ஜெயபிரதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் ஆண் குழந்த உள்ளது. இந்நிலையில் அருண்குமார் மனைவியிடம் கூடுதலாகப் பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வரவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அருண்குமார் மீண்டும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் வீட்டின் சமையல் அறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்து பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் ஜெயபிரதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். இது சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை வாடிப்பட்டி போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!