Tamilnadu

இயற்கை வேளாண் திட்டம்.. இயற்கை விவசாயிகளின் மூலம் ரசாயன உணவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தி.மு.க அரசு!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -

  • இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். இதற்கென இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு, 2021-22ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும்.

  • இயற்கை வேளாண் இடுபொருட்கள் இன்றியமையாதவை என்பதால், அவை வேளாண் கிடங்குகளிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.

  • தனியார் மூலம் விற்கப்படும் இயற்கை இடுபொருட்கள் தரத்தை உறுதிசெய்ய தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

  • இயற்கை வேளாண்மை என்னும் பெயரில், செயற்கை உரமிட்டு வளர்த்து அதிகமான விலைக்கு விற்படுவதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • இயற்கை எருவைப் பயன்படுத்தும் உழவர்களின் கைபேசி எண்களைக் கொண்டு, இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டாரம்தோறும் தயாரிக்கப்படும்.

  • அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

  • ரூ.33 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு புதிய இயக்கம்” : நெல் ஜெயராமனின் கனவை நிறைவேற்றிய வேளாண் பட்ஜெட் !