Tamilnadu
“கேமிராவுக்கு ஆர்டர் செய்தால்... பார்சலில் வந்தது என்ன தெரியுமா?'' : ஆடி ஆஃபரில் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத். இவர் புதுவண்ணாரப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300D கேமிரா 26,500ஆடர் செய்துள்ளார்.
கோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் இ.எம்.ஐ தவனை முறையில் கேமிரா வாங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியர் வினோத்திடம் பார்சலை கொடுத்துள்ளார்.
இதில், சந்தேகம் அடைந்த வினோத் பார்சலை பிரித்து பார்த்தபோது கேனான் கேமிரா சீல் இடப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பெயிண்ட் டப்பா மற்றும் பழைய கேமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வினோத்தின் புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இதுபோல் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!