Tamilnadu
"ஆகஸ்ட் 13 முதல் செப்.21 வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்... 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்" : சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் அன்றைய தினம் பொது பட்ஜெட், 14ஆம் தேதி தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் செப்டம்பர் 21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதியமைச்சர், நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இது காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். இதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் கணினிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கையடக்க மடிக்கணினியும் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும். இதில் நிதிநிலை பட்ஜெட் புத்தக வடிவிலேயே இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் துறைக்கு தனியாக நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன் மீதான விவாதங்கள் நான்கு நாட்கள் நடைபெறும்.
பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டம்ர் 21ம் தேதி வரை 23 நாட்கள் பொது பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 10 ஆண்டுக்கால தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!