Tamilnadu
“Youtube-ல் வீடியோ பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை” : யூடியூபர் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல் !
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் வீட்டிலேயே கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார். மேலும் மீதிநேரங்களில் யூடியூப் சேனல் ஒன்றையும் சந்தர்ராஜ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் வேகமாக சென்றுக்கொண்டிந்த சுந்தர்ராஜை திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம் பகுதியில் போலிஸார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலிஸார் சுந்தர்ராஜின் வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தில் 6 லிட்டர் கள்ளச்சாரம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனைப் பறிமுதல் செய்த போலிஸார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், தனது வீட்டில் கள்ளசாராயம் காய்ச்சியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சுல்தான் பேட்டை போலிஸார் சுந்தர்ராஜ் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியதில், வைக்கப்பட்டிருந்த 75 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப் பொருள்கள் மற்றும் அடுப்பு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
மேலும் சுந்தர் யூடியூப்பில் வீடியோ பார்த்து மூலம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!