Tamilnadu
தேர்வு அறையிலிருந்து வெளியேற்றம்... மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு: காஞ்சிபுரம் அருகே சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே உள்ளது சவீதா மருத்துவக் கல்லூரி. இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனாலி என்ற மாணிவி முதலாம் ஆண்டு படிந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரியில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது மாணவி சோனாலி மொபைல் போன் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு அறையிலிருந்த ஆசிரியர் சோனாலியை தேர்வு எழுத விடாமல் அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால், மனமுடைந்த சோனாலி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் கல்லூரிக்குச் சென்று சோனாலியின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,சோனாலியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!