Tamilnadu
உஷார்: ஆபாச படம் பார்ப்பவர்களா நீங்கள்? போலிஸ் போர்வையில் மோசடி கும்பல் செய்த அதிர்ச்சிகர வேலை!
சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் சென்னை விரைந்து வந்து சென்னை மாங்காட்டை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32) கொளத்தூரை சேர்ந்தவர் கேப்ரியேல் ஜோசப்(37) திருச்சியைச் சேர்ந்தவர் தினோசந்த்(29) ஆகிய மூன்று பேரும் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களின் ஐடியை கண்டுபிடித்து அவர்களிடம் டெல்லி காவல்துறை போல் பேசி டெல்லி காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி நீங்கள் செய்த குற்றத்திற்கு 3000 முதல் 4000 வரை அபராதம் கட்ட வேண்டும் எனக்கூறி பலரை ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அப்படி தவறும் பட்சத்தில் காவல்துறை உங்கள் வீடுகளுக்கு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என ஏமாற்றி சுமார் 34 லட்சம் வரை மோசடி செய்த நபர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் கைது செய்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!