Tamilnadu
சென்னை - பாண்டிக்கு கப்பல் சேவை? வேறு எங்கெல்லாம் செல்லலாம்? துறைமுகம் ரவீந்திரன் சொன்ன அசத்தல் தகவல்கள்!
1971 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
புது டெல்லியில் உள்ள போா் நினைவு சதுக்கத்தில் நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு நாட்டின் நான்கு திசைகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.
இதன் ஒரு வெற்றி ஜோதி டெல்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று தொடர்ந்து சென்னை வந்தடைந்துள்ளது. இன்று அந்த வெற்றி ஜோதி சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஜோதியை வரவேற்று பேசிய லெப்டினன்ட் கர்னல் அருண், போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக உள்ள ஜோதியை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று இது குறித்து இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரவீந்திரன், துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக கப்பல் போக்குவரத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளதாகவும், விரைவில் நிறுவனங்களை இறுதி செய்து போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் 1971 ல் நடந்த போரில் பங்கேற்று தற்போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!