Tamilnadu
'5 பைசாவுக்கு ஒரு பிளேட் பிரியாணி'.. முண்டியடித்த மக்கள் கூட்டம்.. திறந்த வேகத்திலேயே மூடப்பட்ட ஹோட்டல்!
புதிதாகக் கடை திறப்பவர்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதிலும் உணவகம் திறப்பவர்கள் விதவிதமான அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள்.
அந்த வகையில், மதுரையில் 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிளேட் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்போடு புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டது.
மதுரை செல்லூர் ரோட்டில்தான் இந்த இந்த அசைவ ஹோட்டல் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவையொட்டி 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டனர். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் அந்த பகுதி முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்தை அடுத்து, 11 மணி முதலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் 5 பைசாவுடன் பிரியாணி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தபடியே 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கியது. ஒருகட்டத்தில் பிரியாணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆர்வ மிகுதியில் முண்டியடித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னே சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலிஸார் வந்தும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் 5 பைசாவுக்குப் பிரியாணி வழங்கும் சலுகை முடிந்துவிட்டது என கூறி ஹோட்டல் நிர்வாகம் கடையை மூடியது. இருப்பினும் ஆர்வமுடன் பிரியாணி வாங்க வந்தவர்கள் 5 பைசாவுடன் ஏமாற்றத்துடன் அங்கேயே சிறிதுநேரம் நின்றிருந்தனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!