Tamilnadu
காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல்; அதிர்ச்சியில் தாய்; கைதான வளர்ப்பு தந்தை!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த பெண்ணுடன் அவரது இரண்டு மகள்களும் வசித்து வருகிறார்கள்.
இதையடுத்து அவருக்கு கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வளர்ப்பு மகள்கள் இருவருக்கும் கணேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என கூறி இரண்டு மகள்களின் உடலிலும் சூடு வைத்து மிரட்டியுள்ளார்.
இது பற்றி அறிந்த மகளின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வந்தே மாதரம் சட்டத்திற்கு எதிரான வழக்கு : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!
-
மின்வெட்டால் 5 நாட்களில் ரூ.40 கோடி இழப்பு : த.வெ.க அரசுக்கு சுட்டிக்காட்டிய மு.வீரபாண்டியன்!
-
காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!
-
டெல்லியில் அதிர்ச்சி: துப்பாக்கி முனையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை!