Tamilnadu
"ஒரே கையெழுத்தில் தலையெழுத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”:புரட்சிகர திட்டம் என பெண்கள் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய ‘அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்’ திட்டம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் சமூகநீதி நோக்கில் மிகப்பெரும் சமூக-பொருளாதார புரட்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து ஒருவரின் சமூக வலைதள பதிவு வருமாறு:
தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப்பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது. இணைய தி.மு.க.வினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது. பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதைக் கண்டு கொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள். ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்டபொழுது...
மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைக்கோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும். முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார். நெதமும் வாங்குற சம்பளத்துல 60 ரூவா பஸ்ஸுக்கே போச்சுன்னா... மீதி கிடைக்குறதுக்கு இவ்ளோ சிரமப்படனுமான்னு, வீட்லயே இருந்து விவசாய வேலை வந்தா மட்டும் செஞ்சோம் சார்.
இப்பத்தான் ஸ்டாலின் ஐயா பஸ்ஸுக்கு எங்களுக்கு எல்லாம் ஃப்ரீன்னு சொல்லிட்டாங்களே... அதான் சார் நிரந்தர வேலையா இருக்குமேன்னு கேட்டு வந்தோம்...!
அவ்ளோதான் மேட்டர்... மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு மக்கள் தலைவன்... ஆட்சியாளனாகவும் அமர்ந்துவிட்டால்... ஒரே ஒரு சொடுக்குல... ஒரே ஒரு கையெழுத்துல... நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஆங்கோர் ஏழை கிராமத்து பெண்ணுக்கும் ஒரு நிறுவனத்தில் தடையில்லாத வேலையை கிடைக்கச் செய்ய முடியும்..!
அந்தப் பெண் தினம் தினம் தன் வீட்டுக்கு கொண்டு செல்லும் 250 அல்லது 300 ரூபாய், அந்தக் குடும்பத்தின் வறுமைக்கு நிச்சயம் சவால் விடும். அந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கான படிப்பு தடையில்லாமல் தொடரும்..!
இதை ஏன் நாம் பேசவில்லை..?! இதை ஏன் நாம் சிலாகிக்கவில்லை...?! இதை ஏன் நாம் கொண்டாடவில்லை..?!எதிர்க்கட்சிகள் எதை வேண்டுமானாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்கட்டும்... மக்கள்... குறிப்பாக பெண்கள், தலைவர் தளபதியாரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..! வாழ்த்துகளும்... நன்றிகளும் எங்கள் முதல்வரே..!
- சௌமியன் வைத்யநாதன்
Also Read
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
-
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!
-
முதலமைச்சர் விஜய்க்கு “நாவடக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி தாக்கு!