Tamilnadu
"நல்லா இருக்குற தமிழ்நாட்டை எதுக்கு பிரிக்கணும்?" : ரூ.5 லட்சம் கொரோனா நிதி அளித்த நடிகர் வடிவேலு பேட்டி!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதலமைச்சரின் இந்த வேண்டுகோளை அடுத்து தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் நிதி உதவி வழங்கி வாருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினார். பின்னர் நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நடிகர் வடிவேலு பேசுகையில், "முதலமைச்சரைச் சந்தித்தபோது மிகவும் எளிமையாகவும், குடும்பத்தில் ஒருவரைப் போலும் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உள்ளது.
மக்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு முதலமைச்சர் பேசியது எங்களுக்கு எல்லாம் நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்பது சிறந்த திட்டம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொங்கு நாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன. இவ்வளவு நாட்டையும் பிரிக்க முடியுமா? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை எதற்குப் பிரிக்க வேண்டும்? இவற்றையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது" என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!