Tamilnadu
“ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான 330 ஏக்கர் நிலங்களில் 24 ஏக்கர் மட்டுமே உள்ளது” : அமைச்சர் சேகர்பாபு!
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அரங்கனின் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்ட
அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாடுகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று இருந்ததால் குடமுழுக்கும் உள்ளிட்ட எந்த புனரமைப்புப் பணிகளும் திருக்கோவில்களில் நடைபெற்றவில்லை.
கடந்த 2 மாதங்களில் திருக்கோயிலுக்கு நேரடியாக சென்று துறை சார்ந்த செயலாளர், துறை சார்ந்த ஆணையாளர் மாவட்ட ஆட்சியாளர், காவல்துறையில் ஒன்று சேர்த்து தமிழகம் முழுவதும் பார்வையிட்டு குடமுழுக்கு, பராமரிப்பு பணிகளையும் விரிவுபடுத்தவும் அறிவித்துள்ளேன்.
கடந்த 12 ஆண்டு திருக்கோயில் குடமுழுக்கு நடத்தாத கோயில்களில் எண்ணிக்கைகளை கண்டறிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்ரீரங்கம் கோவில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தி உள்ளேன். கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.
கடந்த ஆட்சியில் போகின்ற போக்கில் 2011 மற்றும் 2020ஆண்டு நிரந்தர பணி உத்தரவாதம் என தெரிவித்தார்கள். 5 ஆண்டுகள் தற்காலியமாக பணிபுரிந்த பணியாளர்களின் விபரம் பெற்று அதற்குரிய கருத்துரு பெற்று ஒரு மாதத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
பணிநிரந்தரம் செய்த பிறகு இருக்கும் காலி பணியிடங்களில் மற்றவர்கள் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும். அர்ச்சகர்கள், நாவிதர்கள் உள்ளிட்ட அனைத்து பணி இடங்கள் கண்டறியப்பட்டு பணியமர்த்தபடும். சிலை மாயமான வழக்கில் உண்மை தன்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் இடங்களில் கடைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரராக ஏற்றுக் கொள்ளப்படும். இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் அதற்கு உரிய பரிந்துரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதிய பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஓய்வு ஊதியம் அளிக்கப்படும். ஒய்ஊதிய உயர்வை முதல்வரிடத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்த உப கோயில்களில் தொல்லியல் துறை அனுமதி பெற்று அனைத்து கோயில்களிலும் விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமாக 330 ஏக்கர் நிலங்களில் தற்போது வெறும் 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளது. அந்த நிலங்கள் என்ன ஆகின, எப்படி அபகரித்தார்கள் என்கிற விவரம் பெரிதாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!