தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் பெருமைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் முதலமைச்சர் மேற்கொள்வார்” : கனிமொழி MP உறுதி!

தமிழ்நாட்டின் பெருமைகளை என்றும் தி.மு.க அரசு விட்டுக்கொடுக்காது; அதை பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் பெருமைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் முதலமைச்சர்  மேற்கொள்வார்” : கனிமொழி MP உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை வடக்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பாக வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 311வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீரர் அழகு முத்து கோனின் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பெருமைகளை என்றும் தி.மு.க அரசு விட்டுக்கொடுக்காது; அதை பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” என தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories