Tamilnadu
“‘க்ளீன் சென்னை’.. 2 நாளில் 12 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்” : பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை!
சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலையின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் உள்ள அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது என மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஜூலை 8ம் தேதி அதற்கானப் பணிகளை துவக்கியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் சுவரொட்டிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், 1913 என்ற எண்ணையும் மாநகராட்சி அறிமுகம் செய்து இந்த எண்ணில் அழைத்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுவரொட்டிகளை அகற்றப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !