Tamilnadu
"மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும்" : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதோடு, அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் சட்டத்திற்குட்பட்ட அனைத்து முயற்சிகளையும் எடுத்து தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைச் சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மேகதாது பிரச்சனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 4ம் தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில் கடிதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்குக் காவேரி நீரை நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும். அதைச் செயல்படுத்தக் கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதைத் தடுத்து நிறுத்துவதற்குச் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6,000 பேருக்கு கடனுதவி : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
-
வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!
-
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் : நாடாளுமன்றத்தில் கலாநிதி வீரசாமி MP வலியுறுத்தல்!
-
PM-KISAN திட்டத்தில் பணம் மோசடி மீது நடவடிக்கை என்ன? : மக்களவையில் முரசொலி MP கேள்வி!