Tamilnadu
“பிரதமர் மோடி அறிவித்துள்ள 6 லட்சம் கோடி கொரோனா திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வேலை”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து சென்னை திருவான்மியூரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் பெட்ரோல் விலை 125 முதல் 150 ரூபாய் வரை உயரும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மேலும் ஒன்றிய அரசின் கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளனர். ஏழை மக்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு, வேளாண் பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்கிறது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான மருந்தினை நாமே தயாரித்துக் கொள்ள முடியும். அதனையும் செய்ய விடாமல் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள 6 லட்சம் கோடி கொரோனா ஊக்கத்தொகை என்பது தேவைப்படுவோர்க்குக் கடன் வழங்குவது மட்டுமே, அந்த கடனை பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும், இது மோடி அரசின் ஏமாற்றும் வேலை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!