Tamilnadu
“நிதிநிலை சீரானதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்” : நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் உறுதி!
பெட்ரோல், டீசல் மீதான வரி எப்போது குறைக்கப்படும் என்ற கேள்விக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு பற்றி தி.மு.க அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "2006-11ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த தி.மு.க 3 முறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. 2014ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்தது.
அதைக் குறிப்பிட்டு செஸ் வரியை 28% லிருந்து 30% ஆக உயர்த்தியது அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2014ஆம் ஆண்டு பா.ஜ.க பொறுப்பேற்றபின்தான் 9.48% ஆக இருந்த செஸ் வரியை 21.48% ஆக உயர்த்தியது. அதுவே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
இந்த வரி வருவாயில் 4% மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. எஞ்சிய 96% வரி வருவாயை ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இதேபோல், ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாயையும் ஒன்றிய அரசே வைத்துக்கொள்கிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள நிதி நிலைச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கமுடியாது. நிதிநிலை சீரடைந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!