Tamilnadu
“ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சுங்கசாவடிகள் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 108.13 ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் சந்திப்பில் நடைபெற்று வரும் U வடிவ பாலம், இந்திரா நகர் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் நடைமேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டு வரும் கூடுதல் பாலம் ஆகியவற்றின் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர், பெருங்குடி சுங்கச்சாவடி, மற்றும் கலைஞர் சாலையில் உள்ள சுங்கசாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக பெருங்குடி சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள 4 சுங்க சாவடிகளின் வருமானம் தொடர்பாக , பணியாளர்களுக்கான மாத ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் " என தெரிவித்தார்.
மேலும், "சென்னை மாநகராட்சி பகுதிகுட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம், இ.சி.ஆர் சந்திப்பு, மேடவாக்கம் என இந்த பகுதியில் சாலைகளின் மதிப்பீடுகளை ஈடு செய்ய சுங்கசாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்காவடிகளை அகற்ற தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
4 சுங்கசாவடிகளும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ளது. 4 சுங்கசாவடிகளையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இதன் வருமானம் மற்றும் பராமரிப்பு செலவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள 4 சுங்கசாவடிகள் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
தமிழக முதலமைச்சர் எந்த பணிகளை எடுத்தாலும் அதில் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறார். தொடர் நடவடிக்கைகள் உள்ள காரணத்தால் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி இந்த பகுதியில் பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!