Tamilnadu
3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 1.5 கோடி மதிப்பில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் எல்&டி மூலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொரோனா முதல் அலையில் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகளே போதுமானதாக இருந்தது. இரண்டாவது அலையில் அனைவருக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்பட்ட சூழலில் 70 ஆயிரம் புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முதல்வர் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுக்கைகள் மருத்துவமனைகளில் நிரந்தரமாக இருக்கும்.
3 வது அலையில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவது உறுதிபடுத்தப்படாத செய்தி என்றாலும் அனைத்து அரசு பொது மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளும் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கரும்புஞ்சை அறிகுறி தெரிந்த உடனே நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும். இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கரும்புஞ்சை நோய்க்கு 45 ஆயிரம் மருந்துகள் வேண்டும் இதுவரை 11 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது. இதில் 4 ஆயிரம் மருந்துகள் கையிறுப்பில் உள்ளது.
Also Read
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!