Tamilnadu

N95 மாஸ்க் ரூ. 22க்கு அதிகமாக விற்கக்கூடாது - 15 பொருட்களுக்கு விலை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கவேண்டிய விலையை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பேரிடர் காலத்தில் லாப நோக்கில் சிலர் கொரோனா தடுப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது.

இந்நிலையில், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான விலையையும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3, மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிருமிநாசினி 200 மி.லி : ரூ.110

N95 முகக் கவசம் : ரூ.22

கையுறை : ரூ.15

ஆக்சிஜன் மாஸ்க் : ரூ.54

பிபிஇ கிட் : ரூ.273

பல்ஸ் ஆக்சிமீட்டர் : ரூ. 1,500

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Also Read: மூடநம்பிக்கைகளுக்கு மாறான அறிவியல் பார்வையே இன்றைய தேவை; ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பு பணியையே செய்யட்டும்!