Tamilnadu
“முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை” : வனவிலங்குகளை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!
உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மனிதர்களை மட்டும் விட்டு வைக்காமல், தற்போது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், அண்மையில் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் 28 வளர்ப்பு யானைகளுக்கு, இன்று காலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர், வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
குறிப்பாக தெப்பக்காடு முகாமில் உள்ள இரண்டு வயது குட்டியான ரகு முதல் 60 வயதை கடந்த மக்னா யானை மூர்த்தி வரை தும்பிக்கை மற்றும் ஆசனவாயல் ஆகிய இரண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது எடுக்கப்பட்டகொரோனா பரிசோதனை மாதிரிகள் , உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?
-
கோப்பையை வென்றும் தொடரும் சோகம்... அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த RCB அணி... விவரம் உள்ளே !