Tamilnadu

"நான் பேசியது எனக்கே அசிங்கமா இருக்கு.." - கடும் எதிர்ப்பால் மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்ட இளைஞர்!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் கொரோனாவால் உயிரிழப்போரின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்தார் என கூறி மருத்துவர்களை தாக்கும் கசப்பான சம்பவங்கள் சில இடங்களில் அரங்கேறின.

அசாமில் இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரோனாவால் இறந்தவரின் உறவினர்கள், மருத்துவர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் மருத்துவர்களைத் தவறாகப் பேசி வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,"கொரோனாவுக்கு வைத்தியமே இல்ல; அவங்கள அடிக்குறதுல தப்பே இல்ல... கைல காசு வாங்கிட்டு தான வேலை செய்றீங்க... ஒன்னுமே தெரியாத அவங்ககிட்ட எதுக்கு காச கொடுக்கனும்" எனப் பேசியிருந்தார்.

இந்த இளைஞரின் பேச்சுக்கு மருத்துவர்களும், இணைய வாசிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த இளைஞர், நான் மருத்துவர்களை தவறாகப் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் எனப் பேசி மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், "நான் மருத்துவர்களை தவறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தேன். எல்லா மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பேசியதை நினைத்துப்பார்த்தால் எனக்கே வருத்தமாக இருக்கு. சில பேர் என்னிடம் கூறியதை தவறானக கருதி இப்படி பேசிவிட்டேன். நான் செய்ததை நினைத்தால் எனக்கே அசிங்கமா இருக்கு. மருத்துவர்கள் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார்.

Also Read: ஜூன் 8 வரை கடலோர தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை தகவல்!