Tamilnadu
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு... இன்று மட்டும் 33,161 பேர் டிஸ்சார்ஜ்!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த சில நாட்களாக பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இன்று 20,421 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,63,928 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,80,28,680 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று கோவை மாவட்டத்தில் 2,645 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,694 பேருக்கும், சென்னையில் 1,644 பேருக்கும்,கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 33,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 2,44,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 434 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 166 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 268 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், கொரோனா உயிரிழப்பு 27,005 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!