Tamilnadu
“தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு” முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
- அரசு அலுவலகங்கள் 30% ஊழியர்களுடன் செயல்படலாம்.
- 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- 50 % சதவீத பத்திரப்பதிவுக்கு தமிழக அரசு அனுமதிக்கப்படும்.
- ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
- மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி
- மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்!
- தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு.
- ஜூன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.
- கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
- தொற்று அதிகரிக்கும் 11 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
- காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அனுமதிக்கப்படும்.
- மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!