Tamilnadu

10 மாவட்டங்களில் கடுமையாகிறது கட்டுப்பாடுகள்? ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்:

கொரோனா பாதிப்பு முன்னிட்டு தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை.

17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. 10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு ஒரு சில தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் உள்ள 142 அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழக அரசு திட்டம். கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது.

அரியலூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், கரூர், தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் , திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும் எனவும் தகவல்.

புதியதாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட உள்ளது.

Also Read: “கொரோனா நிவாரண நிதிதிரட்ட ‘முதல்வரின் முதல் கையெழுத்து’ ஒவியம் ஏலம்” : 11ம் வகுப்பு மாணவன் அசத்தல் !