கோப்புப்படம்
Tamilnadu

“தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை விருகம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சார்பில் 1070 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை நடிகர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

அப்போது, “கொரோன பேரிடர் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்றதன் அடிப்படையில் 1070 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எல்லா இடத்திலும் முதலமைச்சர் கூறிய படி அனைவருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தமாக தமிழகத்துக்கு 42 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டிய நிலையில், அதில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் நேற்று முன் தினம் வந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவே எல்லா மாவட்டத்திற்கும் முறையாக அந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. 4 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து அந்த தடுப்பூசிகள் பயன்படுத்த பட உள்ளது.

Also Read: “விரைவில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

மீண்டும் இன்று மற்றும் நாளை தடுப்பூசிகள் வர உள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் தமிழக அரசு எதிர்ப்பார்த்த 42 லட்சம் தடுப்பூசிகள் வந்தடையும். ஊரடங்கு நேரத்தில் நம்மை நாம் தற்காத்து கொள்ள வேண்டும். தளர்வுகளற்ற ஊரடங்கு வெற்றி பெற்றால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு வரும். வெளியில் தேவை இல்லாமல் வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழக அரசின் கையிருப்பில் உள்ளது. அதை 6 நாட்களுக்கு பயன்படுத்தலாம். மீண்டும் டெல்லியிலிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிராபகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: “தடுப்பூசி கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு”: நீதிமன்றத்தில் கேரள அரசு பகிரங்க குற்றச்சாட்டு!