Tamilnadu

சென்னை திமுக Mla, MPக்கள் சார்பில் 100 O2 செறிவூட்டிகள் வழங்கல்: தட்டுப்பாடில்லா மாநிலமாகும் தமிழ்நாடு!

சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் திருவொற்றியூர், எழும்பூர், ராயபுரம், தி-நகர் , ஆகிய தொகுதிகளின் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி'யிடம் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்.

சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகள் சார்பில் கொரோனாவல்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக 160 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்போது 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.ட்ரீம்ஸ் மூர்த்தி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி,  எழும்பூர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Also Read: மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலமும் முக்கியம்: அன்பில் மகேஷ் பேட்டி!

கடந்த 24 ஆம் தேதி அன்று சென்னை மாநகராட்சி ஆணையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக சென்னைக்குட்ப்பட்ட 6 சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றம் சார்பில் 140 ஆக்சிசன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 4 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதி சார்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

Also Read: “தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” : நிதியமைச்சர் PTR உறுதி!