Tamilnadu
சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளி.. காரை நிறுத்திய உதவிய அமைச்சர் KN.நேரு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளியை பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர் கே.என்.நேரு உதவி செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து, உடையாபட்டியில் திமுக பிரமுகர் இறந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உடையாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த அமைச்சர் கே.என்.நேரு உடனடியாக காரை நிறுத்தி அந்த நபரிடம் சென்று மாற்றுத்திறனாளிக்கான வண்டி இருக்கின்றதா என்று கேட்டறிந்தார்.
மேலும் அவருக்கு தேவையான உதவி என்ன தேவை என்பதை கேட்டறிந்ததோடு, தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியதுடன் தான் காரில் வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
திடீரென அமைச்சர் ஒருவர் தன்னிடம் காரை விட்டு இறங்கி வந்து தன்னிடம் பேசி தேவையானவற்றை கேட்டறிந்தது மாற்றுத்திறனாளி வாலிபரான அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
நெகிழ்ச்சிக்குள்ளான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் அதிக அளவில் வலம் வந்து கொண்டுள்ள நிலையில், அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!